முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று

178

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீண்டும் அமைக்கப்படவுள்ள, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த எட்டாம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட போராட்டம் மற்றும், மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை அடுத்தும், மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் ஆதரவு பெருகியதாலும் இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நினைவுத் தூபி அமைப்பதற்கு துணைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று அத்திவாரம் அமைப்பதற்கான பணிகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்ற பதாமையும் மாணவர்களால் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *