முக்கிய செய்திகள்

முழுமையான ஆதரவை கனடா வழங்கும்

157

சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக  கனேடிய அமைச்சர் மார்க் கார்னோ (Mark Carno) தனது கீச்சகப்பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

ஆகவே சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை கனடா வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *