முக்கிய செய்திகள்

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு கூட்டமைப்பு கண்டம்

194

முஸ்லிம் மக்கள் தமது மதத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப உடல்களை புதைக்கும் உரிமையை மறுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். இது தொடர்பில் அரசு தாமதமின்றி இறுதி முடிவுக்கு வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடிய போது ஒருமனதாக இந்த நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவ நிபுணர்களின் பார்வையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பது தீங்கும் ஏற்படாது எனத் தெரிகிறது. உலகெங்கிலும் பல நாடுகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல் மற்றவர்களுக்கு தீங்கை ஏற்படுத்தாது என்ற அடிப்படையில் புதைக்கப்படுவதாக தெரிகிறது என்பது சுட்டிக்காட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *