குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தோடு அவர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் முஸ்லிம் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டி அஸ்கிரிய ,மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை, இன்று சந்தித்து, தங்களது பதவி விலகல்களின் பின்புலம் பற்றி விளக்கமளித்துள்ளனர்.
இதன்போதே அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் மேற்கொண்டவர் கூறியுள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.


Previous Post90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்
Next Postதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன்