மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

1236

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

, அதிகாரிகளின் கால அவகாசத்தை ஏற்க மறுத்த மக்கள்!
விமானப்படையினரால் மீள வழங்கப்படவுள்ளதாக காணிகளை வழங்கவேண்டுமென வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம், அதிகாரிகளின் கால அவகாசத்தை ஏற்க மறுத்த மக்கள்!
விமானப்படையினரால் மீள வழங்கப்படவுள்ளதாக காணிகளை வழங்கவேண்டுமென வலியுறுத்தி கேப்பாப்புலவு மக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் விமானப்படைத் தள இரண்டாம் வாசலில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறித்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கால அவசாசத்தைக் கோரியபோதும் மக்கள் அதனை நிராகரித்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணிகள் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
விமானப்படையினர் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளை அளந்து கையளிப்பதற்காக காணி உரிமையாளர்களை நேற்றுமுன்தினம் குறித்த பகுதிக்கு வருமாறு கேப்பாபுலவு கிராம சேவை உத்தியோகத்தர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கமைய மக்கள் அங்கு சென்றிருந்த போதிலும், எந்தவொரு அதிகாரியும் காணிகளை அளந்து கையளிப்பதற்கு வருகைதராத நிலையில், தமது காணிகள் மீள வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த காணிகள் வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமானதல்ல என்பதை உறுதிப்படுத்தியபின்னர், காணிகள் வழங்கப்படுவது தொடர்பாக அறிவிக்கப்படும் என பிரதேச செயலாளர் தொலைபேசியூடாக தெரியப்படுத்தியதையும் மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அத்துடன் வனவள திணைக்கள அதிகாரிகளினதும் கோரிக்கைகளை மறுத்த மக்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர் போன்றோர்களால் கோரப்பட்ட இரண்டு வாரகால அவகாசத்துக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அமக்களைச் சென்று சந்தித்ததுடன் மக்களின் காணிகளை அவர்களிடம் மீண்டும் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மைத்திரிபால சிறிசேன வருகை தந்து கேப்பாப்புலவு மக்களின் காணிகள் வழங்கப்படுமென மக்களுக்கு மாயை காட்டப்பட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இராணுவம் அவ்விடத்தை விட்டுச் செல்லுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தாம் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.விமானப்படைத் தள இரண்டாம் வாசலில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறித்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கால அவசாசத்தைக் கோரியபோதும் மக்கள் அதனை நிராகரித்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணிகள் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
விமானப்படையினர் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளை அளந்து கையளிப்பதற்காக காணி உரிமையாளர்களை நேற்றுமுன்தினம் குறித்த பகுதிக்கு வருமாறு கேப்பாபுலவு கிராம சேவை உத்தியோகத்தர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கமைய மக்கள் அங்கு சென்றிருந்த போதிலும், எந்தவொரு அதிகாரியும் காணிகளை அளந்து கையளிப்பதற்கு வருகைதராத நிலையில், தமது காணிகள் மீள வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த காணிகள் வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமானதல்ல என்பதை உறுதிப்படுத்தியபின்னர், காணிகள் வழங்கப்படுவது தொடர்பாக அறிவிக்கப்படும் என பிரதேச செயலாளர் தொலைபேசியூடாக தெரியப்படுத்தியதையும் மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அத்துடன் வனவள திணைக்கள அதிகாரிகளினதும் கோரிக்கைகளை மறுத்த மக்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர் போன்றோர்களால் கோரப்பட்ட இரண்டு வாரகால அவகாசத்துக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அமக்களைச் சென்று சந்தித்ததுடன் மக்களின் காணிகளை அவர்களிடம் மீண்டும் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மைத்திரிபால சிறிசேன வருகை தந்து கேப்பாப்புலவு மக்களின் காணிகள் வழங்கப்படுமென மக்களுக்கு மாயை காட்டப்பட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இராணுவம் அவ்விடத்தை விட்டுச் செல்லுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தாம் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *