யோர்க் பிராந்தியத்தில் உள்ள மூன்று கொரோனா தடுப்பூசி மையங்கள், இந்த வார இறுதியில் தற்காலிகம்மாக மூடப்படவுள்ளன.
தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு தற்காலிகமாக மூடப்படவுள்ள மூன்று மையங்களில் ஒன்று இன்று நேற்று திறக்கப்பட்ட கனடா வொண்டர்லான்ட்டில் உள்ள மையமும் ஒன்றாகும்.
இந்த மையங்கள் எதிர்வரும் 2ஆம் நாள் தொடக்கம் குறைந்தது ஏப்ரல் 5ஆம் நாள் வரை மூடப்பட்டிருக்கும் என்று யோர்க் பிராந்திய தொடர்பாடல் பேச்சாளர் பற்றிக் கசே (Patrick Casey) தெரிவித்துள்ளார்.
யோர்க் பிராந்தியத்தில் உள்ள ஏனைய தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.