முக்கிய செய்திகள்

மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழப்பு

34

மத்திய மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் அரச சட்டத்தரணிகள் அலுவலகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் முகவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள நகராட்சியான கோடெபெக் ஹரினாஸில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள், குண்டுகள் நிறைந்த காவல்துறை வாகனங்கள் மற்றும் உடல்கள் வீதியின் ஓரத்தில் கிடப்பதைக் காட்டின.

எனினும், எந்தவொரு குழுவும் இதுவரை இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *