முக்கிய செய்திகள்

மெக்ஸிகோ எல்லைச் சுவர் செயற்றிட்டம் தொடர்பாக புதிய திட்டங்கள்- அமெரிக்க ஜனாதிபதி!

261

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மெக்ஸிகோ எல்லைச் சுவர் செயற்றிட்டம் தொடர்பாக புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வாரங்களாக நீடிக்கும் அரசாங்கத்தின் பகுதியளவு முடக்கத்தை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் சிலர், அவரது சமரச கருத்துக்களை கனவு காணும் செயல் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், எல்லைச் சுவரை அமைப்பதற்கு அவருக்கு இன்னமும் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என்று கோரி வருகிறார்.

எனினும், ஜனநாயகக் கட்சியினர் நிதியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

அத்துடன், முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட சலுகைகளை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் பகுதியளவு முடக்கம் காரணமாக வரலாற்றில் என்றும் இல்லாதவாறு சுமார் 8 லட்சம் அரச பணியாளர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *