முக்கிய செய்திகள்

மெய்நிகர் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்வாணமாக தோன்றினார்

267

கனடிய நாடாளுமன்ற பொதுச் சபையின் உறுப்பினர் ஒருவர், ஏனைய உறுப்பினர்களுடனான காணொளி கலந்துரையாடல் ஒன்றில் கிட்டத்தட்ட நிர்வாணமான நிலையில் தோன்றியுள்ளார்.

லிபரல் கட்சி அரசியல்வாதியான வில்லியம் ஆமோஸ் (William Amos) கனடா மற்றும் கியூபெக்கின் கொடிகளுக்கு இடையே நிர்வாண நிலையில் நிற்கும் காட்சி தமக்கு கிடைத்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது ஒரு துரதிஷ்டவசமான தவறு என்று வில்லியம் ஆமோஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடைப்பயிற்சிக்குப் பின்னர் உடை மாற்றும் போது, தனது காணொளிப் பதிவு கருவி தற்செயலாக இயக்கப்பட்டது என்றும், இந்த திட்டமிடப்படாத கவனச் சிதறலுக்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு உண்மையான தவறு, அது மீண்டும் நடக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஊழியர்களுக்கும் மட்டுமே தெரியக் கூடிய ஒளிப்படம், ஊடகத்துக்கு எவ்வாறு கசிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ள லிபரல் கட்சியைச் சேர்ந்த ஆமோஸின் சக அரசியல்வாதி ஒருவர், காணொளிப் பதிவு கருவியைச் சுற்றி நடக்கும்போது நீங்கள் சரியான ஆடை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.” என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *