முக்கிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் வாகனங்கள் மீது கற்கள் வீச்சு

59

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, எதிர்ப்பு தெரிவித்து சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், பாஜ.க  தலைவர்கள் தீபஞ்சன் குஹா, கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டவர்கள்  காயமடைந்துள்ளனர்.

குண்டு துளைக்காத காரில் பயணம் செய்ததால், பாதுகாப்பாக இருக்கிறேன் என்று பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்றும், கூறியுள்ள அவர், 2021ம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க அரசாங்கத்தை அமைக்கும், தாமரை மலரும் என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *