முக்கிய செய்திகள்

மேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

52

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 390 ஆக அதிகரித்தது.

இதேவேளை, நாட்டில் மேலும் 428 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 74 ஆயிரத்து 484ஆக அதிகரித்துள்ளது.

847 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 831 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 269 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *