முக்கிய செய்திகள்

மைக்கேல் கோவ்ரிக் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

38

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடியர்களில் ஒருவரான மைக்கேல் கோவ்ரிக் (Michael Kovrig) நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிங்குவா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது கனடிய இராஜதந்திர சேவை அதிகாரிகள் மூடிய அறைக்குள் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இராஜதந்திர உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரு விடயங்களை முன்வைத்து அவர்கள் அந்தக் கோரிக்கையை விடுத்திருந்தனர். எனினும் அவ்விதமான அறிவிப்பை நீதிமன்றம் செய்யாது விசாரணைகளை முன்னெடுத்தது. மைக்கேல் கோவ்ரிக் (Michael Kovrig) மீது உழவு பார்த்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் இராஜதந்திர எல்லையை மீறிய செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதோடு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *