முக்கிய செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களுக்கு இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிருப்தி

959

இலஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்கள் தொடர்பில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துகள் குறித்து இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சனாதிபதியின் இந்த கருத்துக்கள் தொடர்பில் தென்னிலைங்கையின் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையிலேயே இளம் ஊடவியலாளர் அமைப்புதம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் சுயானதீனமான முறையில் தமது பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த கொலை செய்யப்பட்டமை, உபாலி தென்னக்கோன் மீது தாக்குல் நடாத்தப்பட்டமை, பிரகீத் எக்நெலிகொட காணாமல் போனமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு, குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை குறித்து சனாதிபதி ஏன் அதிருப்தி வெளியிடவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

விசாரணை நடாத்தும் அதிகாரிகளுக்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்காது அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவது பொருத்தமற்றது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *