முக்கிய செய்திகள்

மைத்திரி – ரணில் அரசை அசைக்க முடியாது – ஜோன் அமரதுங்க

992

மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எவராலும் எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு சனநாயக நாடு என்று தெரிவித்துள்ள அவர், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானலும் பேரணிகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்த முடியும் என்ற போதிலும், அதற்காக தற்போதைய ஆட்சியை கவிழ்க்க முடியும் என கனவு காணக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் கூட்டு எதிர்கட்சியினர் கண்டியிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரையை நடாத்தியிருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு எதிர்கட்சி எவ்வளவுதான் கத்தினாலும், தற்போதய அரசாங்கத்தை அசைக்க முடியாது எனவும், சனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் மிகவும் பலமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மக்கள் செல்வாக்கே இல்லாத கூட்டு எதிர்கட்சி, அரசாங்கத்திற்கு சவால் விடுக்க முடியும் என்று நினைப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *