முக்கிய செய்திகள்

மொடேர்னா தடுப்பூசி விநியோகத்தில் இழுபறிநிலை

235

மொடேர்னா தடுப்பூசி விநியோகத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக மாகாண அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒன்ராறியோவுக்கு 3 இலட்சத்து 3 ஆயிரம், மொடேர்னா தடுப்பு மருந்து கடந்த வாரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இந்த மருந்துகள், ஏப்ரல் 19ஆம் நாள் வரை கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அதேவேளை, ஏப்ரல் 19ஆம் நாளுக்கும், 25 ஆம் நாளுக்கும் இடையில், 4 இலட்சத்து 48 ஆயிரம் மொடேர்னா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த்து.

ஆனாலும், இவை இந்த மாத இறுதிக்குள் கையில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் ஒன்ராறிய மாகாண அரசின் தகவல்கள் கூறுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *