முக்கிய செய்திகள்

மொன்ட்றியலில் மதகுருமார் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள்

295

மொன்ட்றியலில் மதகுருமார் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
கடந்த ஆறு தசாப்த காலமாக இவ்வாறு சிறார்கள் மீது மதகுருமார் பாலியல் வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளை கண்காணிக்குமாறு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் அனே மேரி ரிறஹானிடம் (யுnநெ-ஆயசநை வுசயாயn) மொன்ட்ரயலின் பேராயர் கிறிஸ்டியன் லீபைன் (ஊhசளைவயைn டுépiநெ) தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயும் குழுவின் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
தேவாலயங்களின் அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்யும் அதிகாரம் இந்தக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மதகுருமாரினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் தங்களது முறைப்பாடுகளை செய்வதற்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2222
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *