மோசம்பிக்கில் பலர் பலி

32

கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கின் வடக்கு பகுதியிலுள்ள பல்மா நகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியேற முயற்சித்த 7 பேரே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அங்கிருந்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் பயங்கரவாதிகளால் தாக்குல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அப்பகுதியிலுள்ள மக்கள் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *