முக்கிய செய்திகள்

மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது

18

பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எல்லை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் “ கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இப்போது நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார்.

பிங்கர்-4 பகுதி நமது பிராந்தியம். இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பிராந்தியத்தை பிரதமர் மோடி ஏன் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார்?

சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால் பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார்.

இராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இவ்வாறு செய்வதை இந்தியாவில் உள்ள யாரும் அனுமதிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *