மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.
தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் பிரதமர் மோடி நடத்தும் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அண்மைய நாட்களில் பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த முனைந்து வருகின்ற நிலையிலேயே அவர் இந்த கலந்துரையாடலை புறக்கணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.