யப்பானில் கனமழையின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது

443

யப்பானின் மேற்குப் பகுதியில் பெய்துள்ள வரலாறு காணாத கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு என்பவற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்து்ளளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இன்னமும் 50இற்கும் மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமையின் பின்னர் 3 தடவைகள் வழமைக்கு மாறாக அங்கு பெழிந்த கனமாழையால் இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக 20 இலச்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடபபட்டனர்.

பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்ப்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், நிலச்சரிவிலும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டும் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளும் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *