யப்பானை நேற்றைய நாள் தாக்கியுள்ள “ஜாங்டரி” புயலால் அங்கு பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
சூறாவளியின் தாக்கத்தின் முன்னராக நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே தலைநகர் ரோக்கியோ உட்பட நாடு முழுவதும் கடுமையான காற்று வீசியதுடன், கனமழையும் பெய்தது.
அதனைத் தொடர்ந்து நேற்றைய நாள் வீசிய புயலின் தாக்கதினால் பல இடங்களில் தொடரூந்துச் சேவைகள் மற்றும் விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டதனால் போக்குவரத்துச் சேவைகளும் நிலைகுத்திப் போயிருந்தன.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.