யாழில் கடுமையான மழை; 8 குடும்பங்கள் பாதிப்பு

102

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று காலை முதல் இடைவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக 8 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

அத்துடன் மழை காரணமாக 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பளை, மருதங்கேணி, சாவகச்சேரி, பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த வீடுகளே சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *