முக்கிய செய்திகள்

யாழில் மேலும் அறுவருக்கு கொரோனா

48

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய 100 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் அறிக்கை இன்று மாலை வெளியாகியுள்ளது.

இதன்படி, தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழில் இன்றுமட்டும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மருதனார்மடம் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *