முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 45 பேருக்கு கொரோனா தொற்று

6

யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர புதிய சந்தை தொகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 541 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில், 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 756 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 321 பேரின் மாதிரிகள் சிறி ஜெயவர்த்தன புர பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட போது. 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரில் 4 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *