சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று 11 ஆவது நாளாக, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.
நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மத தலைவர்கள் என பலரும் பங்கேற்று ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
லண்டனில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வக்குமாருக்கு ஆதரவாகவும், அவரது போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலும் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.