முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று

28

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில்  33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளது.

சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ள நிலையில், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வடக்கு மாகாணத்தில் 44 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பரிசோதனையில், 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருநெல்வேலி பொதுச்சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள 3 கைதிகளுக்கும், திருநெல்வேலியை சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாண  பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்,  சுன்னாகம் தொற்றாளருடன், தொடர்புடையவர்   என மூவருக்கும், தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர்  மணிவண்ணனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் மூவரும், மல்லாவியில்  இருவருமாக ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பளையில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *