யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 பேர் உள்ளிட்ட 23 பேருக்கு ஒரே நாளில், கொரோனா

29

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 பேர் உள்ளிட்ட 23 பேருக்கு ஒரே நாளில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாற்றாக 60 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில், 9 வியாபாரிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 9 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவரும்,  யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னாரில் பொது மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாண நகர, மரக்கறி சந்தைத் தொகுதி மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

அத்துடன் சந்தைத் தொகுதியில் வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *