முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை

568

தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.

13 வது தெற்காசிய விழா நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற  64KG பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.

இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வரலாறு படைத்துள்ளார்.

தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார்.

2014ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் பாடசாலை மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

கனிஷ்ட பிரிவில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 4 தங்கப்பதக்கங்களையும், சிரேஷ்ட பிரிவில் 3 வெள்ளி, 2 தங்கப்பதக்கங்களையும் ஆர்ஷிகா வென்றுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பளு தூக்கல் போட்டிகளில் மூன்று தேசிய சாதனைகளுடன் வெற்றியீட்டியவர் என்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *