முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது

160

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை “தேவையற்ற ஒன்று“ என குறிப்பிட்டு, அதை அகற்றும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிராக தமிழனமே தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சமூக ஊடகங்களில் பெரும்பாலானவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். பல்கலைகழக மாணவர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

பல்கலைகழகத்திற்கு எதிரில் கூடியவர்களில் இரண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் நுழைந்தார்கள் என குறிப்பிட்டு கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண காவல்துறையினரால் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான முனைப்பில் தான் ஈடுபட்டிருப்பதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போது வரையில் பல்கலைக்கழகச் சூழலில் குழப்ப நிலை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *