முக்கிய செய்திகள்

யாழ். குடாநாட்டில் இன்னமும் சிறில்ஙகா ஆக்கிரமிப்பு படைகளின் 147 முகாம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

421

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் 147 முகாம்கள் இன்னமும் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93ம், இராணுவ முகாம்கள் 54 மற்றும் விமானப்படை முகாம் 01 என்பன உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீவகப் பகுதிகளிலேயே அதிகளவு கடற்படை முகாம்கள் அமைந்துள்ளதுடன், இந்தப் பகுதிகளில் 61 முகாம்களை சிறிலஙகா கடற்படையினர் அமைத்துள்ளனர்.

குடாநாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளிலும் 32 முகாம்களை அமைத்துள்ள சிறில்ஙகா கடற்படையினர், 269 ஏக்கர் தனியார் காணிகளையும், 260 ஏக்கர் அரச காணிகளையும் ஆக்கிரமித்து யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ளனர்.

அதேவேளை யாழ். குடாநாட்டில் 18 காவல் நிலையங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் காவல்துறையினர் தங்கியிருக்கின்றனர்.

18 இடங்களில் அமைந்துள்ள காவல் நிலையங்களில், 14 இடங்கள், தனியார் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல் நிலையங்கள், காவல்துறை அதிகாரிகளின் பணியகங்கள், விடுதிகள் ஆகியன தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதனால், 200 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர முடியாத நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *