முக்கிய செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் 1670 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

186

யாழ்.மாவட்டத்தில் தற்போது, 1670 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுடன் பேசிய  போதே அவர் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் இடர்கால உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, இதுவரை 2 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறமதியான பொருட்கள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, 26 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்கள் மூலமாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு மாவட்டச் செயலகம் மூலம், உதவிப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *