முக்கிய செய்திகள்

யாழ்.மீனவர்களும் உணவு தவிர்ப்பில்?

50

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால், பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் நாளாந்தம் இழப்பு ஏற்படுகின்றது. ஆகையினால் அதனை கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக யாழ்.மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக, தமக்கு நியாயமும் இழப்பீடும் கோரியே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக யாழ்.மீனவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால், யாழ்ப்பாணம்- வடமராட்சிக் கிழக்கு, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பகுதிகளில் பலரது, பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் வெட்டப்பட்டு, நாசம் செய்யப்பட்டுள்ளது.

நாங்கள், வறிய நிலையில் வங்கிகளில் கடன்பட்டு வலைகளை கொள்வனவு செய்து, மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில், நாளாந்தம் இவ்வாறு பல இலட்சம் பெறுமதியான வலைகள், எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால் நாசம் செய்யப்படுகின்றன.

இது தொடர்பில் மீன்பிடி அமைர்சரிடம் முறையிட்டும், எந்த பயனும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் நாம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்” என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *