அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கிவிட்டதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி யின் உத்தரவின்பேரில் போர்ட்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் தொடங்கியதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதையடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான உறவு மிக மோசமடைந்துள்ளது.