யேமனின் மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக ஹவுத்தி இயக்கத்தின் பயங்கரவாத பெயரை இரத்து செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
யேமனில் சவுதி அரேபியா தலைமையிலான இராணுவப் பிரசாரத்திற்கு அமெரிக்காவின் ஆதரவை நிறுத்துவதாக ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்த ஒரு நாள் கழித்து, வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி 2015 இல் யேமனில் தலையிட்டு, ஹவுத்தி குழுவை எதிர்த்துப் போராடும் அரசாங்கப் படைகளுக்கு ஆதரவளித்தது. பொருளாதார மற்றும் நாணய சரிவு மற்றும் கொரோனா தொற்றுநோயால் நாட்டின் நெருக்கடிகள் மோசமடைந்து வருவதால் ஐ.நா.அதிகாரிகள் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க முயற்சிக்கின்ற மை குறிப்பிடத்தக்கது