முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ரஜினி உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள்

233

ரஜினிகாந்தின் புதிய கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், முச்சக்கர வண்டி சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 9 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதில், “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளதுடன், அதன் சின்னமாக முச்சக்கர வண்டி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்சியை நடிகர் ரஜினிகாந்த் தான் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.

இந்தநிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட கட்சியை மேற்கோள்காட்டி வெளியான செய்தி குறித்து ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *