முக்கிய செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது…

114

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா ஆலோசனை கூறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்தே, அவரது நாடாளுமன்ற ஆசனம்  வெற்றிடமாகியுள்ளதாக அறிவிக்குமாறு, சட்டமா அதிபரால் நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் பதில் வழங்குவதற்கு 3 வார கால அவகாசத்தை,  கோரியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *