ரணில் தரப்பு ஆதரவாளர்கள் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்

262

ரணில் தரப்பு ஆதரவாளர்கள் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இன்று காலை அவர்கள் தொலைக்காட்சி அலுவலகங்கள் முன்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே மேலும் ஐந்து வருடங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை பதவி வகிக்குமாறு, மல்வத்து விகாரையின் அநுநாயக்க தேரர் இம்புல்கும்புரே சிறீ சரணாங்கர விமலதம்மாஹிதான தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடளாவிய ரீதிலுள்ள 60 விகாரைகளுக்கு, வணக்கஸ்தல காணி உரித்தை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஜனாதிபதி தங்களின் பதவிக்காலத்தில் 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. மீதமிருப்பது 1 வருடமே. எனினும் அந்த ஒருவருடத்தின் பின்னரும் தாங்களே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக தங்களுக்கு வல்லமை கிடைக்கவேண்டுமென பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *