முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு;எட்டு சிறார்கள் உயிரிழப்பு

230

ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோவிற்கு கிழக்கே 510 மைல் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்த தாக்குதலில் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து உடனடியாக எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், 17 வயது சிறுவன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, இரண்டாவது தாக்குதாரிக்கு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு அதிக ஆயுதமேந்திய காவல்துறை மற்றும் அவசர வாகனங்கள் பாடசாலை வளாகத்திற்குள் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பதை அங்கிருந்து நேரடியாக வெளியாகும் காணொளிகளில் அவதானிக்க முடிகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *