முக்கிய செய்திகள்

ரஷ்யா தொடர்பான விசாரணையை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது

522

ரஷ்யா தொடர்பான விசாரணையை நிறுத்துமாறு அமெரிக்க தலைமைச் சட்ட அதிகாரி ஜேஃப் சேஷன்சைக் (Jeff Sessions) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த விவகாரம் குறித்து சிறப்பு வழக்குரைஞர் ரொபேட் முல்லர் (Robert Mueller) நடத்திவரும் விசாரணை சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விசாரணைக்கு தலைமைவகித்து வரும் சிறப்பு வழக்குரைஞர் ரொபேட் முல்லர் ‘முற்றிலும் முரண்பாடு நிறைந்த நபர்’ என்றும் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா ஊடுருவியதாகக் கூறப்படுவதன் தொடர்பில் கடந்த 14 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *