ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி (Alexei Navalny) சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தலைநகர் மொஸ்கோவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் என்றும், இதையடுத்து தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நவல்னியின் மனைவி யூலியா (Yulia) தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் உள்ள புஷ்கின் சதுக்கத்தில் (Pushkin Square) ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக் காரர்களை நூற்றுக்கணக்காக ஆயுதமேந்திய காவல்துறையினர் தாக்கி விரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களில் சுமார் 1600 பேர் வரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சுதந்திரமான, அரச சார்பற்ற குழுக்கள் தெரிவித்துள்ளன.
மொஸ்கோவில் மட்டும், 500 பேருக்கு மேல் கைது செய்ய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.