முக்கிய செய்திகள்

ரஸ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ரஷ்ய துணைப் பிரதமருடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்

293

உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு ரஸ்யாவுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறுவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அந்த நாட்டின் துணை பிரதமரை சந்தித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ்வுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று ரஷ்யாவை சென்றடைந்துள்ள சுஷ்மா சுவராஜ், இன்று ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிஸோவை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில், இந்த சந்திப்பின் போது அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

முன்னதாக ரஷ்யா வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மொஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், இதன்போது, இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தசந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் ரவீஷ்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், லாவ்ரோவுடன் இடம்பெற்ற சந்திப்பு மிகுந்த பயனுடையதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் தங்கியிருக்கும் கால பகுதியில் மொஸ்கோவில் நடைபெறும் தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான 23 ஆவது சந்திப்பில் சுஷ்மா சுவராஜ், கலந்துகொள்ள உள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *