பொதுஜன பெரமுன கூட்டணியில், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு போதிய வேட்பாளர்களை நிறுத்துவதற்கு இடமளிக்காவிட்டால், மாகாணசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்படும் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது களுத்துறை, நுவரெலிய போன்ற மாவட்டங்களில், தமது வேட்பாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்றும், கம்பகாவில் ஒரே ஒரு இடம் மட்டும் வழங்கப்பட்டதாகவும், மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தாங்கள் சமர்ப்பித்த பட்டியலின்படி வேட்பாளர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 25 ஆசனங்கள் கிடைத்திருக்கும் என்றும், அனால் தற்போது 14 ஆசனங்களே கிடைத்துள்ளதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது, தங்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், இந்தமுறை நியாயமாக நடத்தப்படாவிட்டால், கட்சியில் அடிமட்டத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், கூறியுள்ளார்.