நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதனை குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் படைக்கல சேவிதர்
எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, ரிஷாத் பதியூதீனை விசாரணைகள் நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
எனினும், சபாநாயகர் அவரை பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தபோதும் அந்த முயற்சி வெற்றி அளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.