ரொரன்ரொ காவல்துறையால் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை தொடர்பிலான தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ளன

545

ரொரன்ரொ காவல்துறையால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை தொடர்பிலான தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ளன.

‘Project Switch’ என்று பெயரிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த கூட்டு விசாரணை நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு ஒன்று இன்று காலையில் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

College Streetஇல் அமைந்துள்ள ரொரன்ரோ காவல்துறையினர் தலைமையகத்தில், இன்று முற்பகல் 10.30க்கு இந்த ஊடகா மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டோர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அவை தொடர்பிலான விபரங்கள் இன்றைய இந்த ஊடக மாநாட்டி்ன போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *