ரொரன்ரோவில் மீண்டும் பலத்த மழை பொழிந்து வருவதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன

437

ரொரன்ரோ நகர் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாக பகுதிகளில் இன்று மீண்டும் கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று மாலை வேளை போக்குவரத்துகள், ஆங்காங்கே கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து்ளளன.

குறிப்பாக இன்று பிற்பகல் பகுதி அளவில் திறகக்ப்பட்டிருந்த Dundas Street இலிருந்து Don Valley Parkwayயின் வடக்கு நோக்கிய தடம் வரையிலான பகுதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.

Lake Shore Boulevardஇன் Remembrance Drive பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில் அது சேதமடைந்து வீதியில் வீழந்துள்ளதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை மற்றும் இரவு வேளைக்குள் 50 மில்லிமீட்டர் வரையிலான மழைப்பொழிவு ஏற்படும் என்று கனேடிய சுற்றுச் சூழ்ல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போதய இந்த வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *