முக்கிய செய்திகள்

ரொரன்ரோ அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

446

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு கடந்த வார இறுதியில் வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் நாள் இரவு பியர்சன் அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பிரதான தொலைபேசி இலக்கத்திற்கு பலமுறை இவ்வாறான வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 5.45ற்கும் 8.55ற்கும் இடையே இந்த தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், வானூர்தி நிலயத்தின் பல பாகங்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதன்போது மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், அவ்வாறு அச்சுறுத்தலான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் தொலைபேசி மிரட்டல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த அதிகாரிகள், 38 வயது சநதேக நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்ப்டடவர் ஒன்ராறியோவின் Lindsay பகுதியைச் சேர்ந்த ஜோஷுவா கிம்பிள்(Joshua Kimble) என்பவர் என அடையாளம் வெளியிட்டுள்ள அதிகாரிகள், தவறான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டகளை அவர் மீது பதிவு செய்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *