ரொரன்ரோ துறைமுகத்தினுள் கார் ஒன்று வீழ்ந்துவிட்ட நிலையில், மீட்பு நடவடி்ககைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

538

ஒன்ராறியோ ஆற்றினுள், குறிப்பாக ரொரன்ரோ துறைமுகப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று, வீதியோர தடுப்பினை மீறி நீரினுள் வீழ்ந்து மூழ்கிவிட்ட நிலையில், அதனை மீட்கும் நடவடி்ககைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று இரவு பத்து மணியளவில், Lake Shore Boulevard East மற்றும் Parliament Street பகுதியில் குறித்த அந்த வாகனம் நீரினுள் வீழு்ந்துள்ளது.

குறித்த அந்த வாகனம் திரும்புவதற்கு முயற்சித்த போதிலும், அங்கிருந்து தடுப்பு கம்பிகளை மோதியவாறு அது நீரினுள் பாய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனத்தை செலுத்திச் சென்றவரும், வாகனத்துடனேயே நீரினுள் மூழ்கிவிட்ட நிலையில், வாகனத்தினுள் சிக்குண்டிருக்க கூடும் என்ற அச்சத்தில் அவரை மீட்கும் நடவடி்ககைகள் முன்னதாக மேற்கொள்ளப்பட்டன.

அந்த பகுதியில் இருந்த சிலர் உடனடியாகவே நீரினுள் குதித்து, அவரை மீட்க முயற்சித்த போதிலும், அந்த முயற்சிகள் கைகூடவில்லை என்று தெரிவிககப்படுகிறது.

அதன் பின்னர் ரொரன்ரோ காவல்துறையினர் நீச்சல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அவர்களது நீரடி காணொளிச் சாதனத்தின் உதவியுடன், குறித்த அந்தக் கார் மூழ்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை மீட்பதற்கான நடவடி்கைகள் எவையும் உடனடியாக முன்னெடுக்கப்படாத நிலையில், இன்று காலை எட்டு மணிக்கு முக்குழிப்பாளர்கள் நீரினுள் செல்வார்கள் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் குறித்த அந்த நபரை மீட்கும் நடவடிக்கை கைவிடப்பட்டு, காரை வெளியே கொண்டுவரும் நடவடி்க்கை இன்று மேற்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *