முக்கிய செய்திகள்

ரொரன்ரோ நத்தார் சந்தைக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

1287

யேர்மனியின் பேர்ளின் நகரில் நத்தார் சந்தையில் இடம்பெற்ற தாக்குதல் உட்பட ஐரோப்பிய நாடுகளில அண்மைய நாட்களில் இடம்பெற்றுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து, ரொரன்ரோ நத்தார் சந்தைக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பேர்ளின் டவுன்ரவுன் பகுதியில் அமைந்திருந்த சன நெரிசல் மிக்க நத்தார் சந்தையின் மீது நேற்று சரக்கு ஊர்தியினை மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன், 48 பேர் வரையில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில், ரொரன்ரோ நத்தார் சந்தைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீள் பரிசீலனை செய்த அதிகாரிகள், தற்போது அதற்கான பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளனர்.

ரொரன்ரொ நத்தார் சந்தையின் முதன்மை அதிகாரி இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தாக்குதலை அடுத்து தமது பகுதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றங்களும் மேம்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ரொரன்ரோ நத்தார் சந்தைக்கு வருவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த போதிலும், அவற்றை தற்போது மீளாய்வு செய்யுமாறு பாதுகாப்புக்க பொறுப்பான தரப்பினரிடம் தாம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறான பாதுகாப்பு மேம்பாடுக்ள மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற விபரங்களை அவர் வெளியிடவிலலை என்ற போதிலும், குறித்த அநத நத்தார் சந்தை வளாகத்தினைச் சுற்றி பலமான பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளதனை இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ள நிழற்படங்கள் காட்டுகின்றன.

ரொரன்ரோ காவல்த்துறையிடம் இது தொடர்பில் தகவல் கோரப்பட்ட போதிலும், குறித்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தாம் ஒருபோதும் விபரங்கள் வெளியிடுவதில்லை என்றும், அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாம் அவ்வப்போது மறுபரிசீலனை செய்து தேவையான மேம்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *