முக்கிய செய்திகள்

ரொரன்ரோ பெரும்பாகத்தில் இன்று இரவில் இருந்து நாளை காலை வரையில் ஐந்தில் இருந்து பத்து சென்ரிமீடடர் வரையிலான பனிப்பொழிவு

1258

நெடுஞசாலை 401 இன் ஊடாக பயணிப்பாருக்கான பயண எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெடுஞசாலை 401இல் ஒஷாவாவுக்கும் Bellevilleற்கும் இடைப்பட்ட பகுதிகளிலும், பிக்கறிங், டூர்ஹாமின் தென் பிராந்தியங்களிலும் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதுடன், பார்வைப் புலனும் மிகவும் மோசமாக இருக்கும் என்று கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் பிறப்பித்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் இருந்தே ஒன்ராறியோ ஏரியை ஒட்டிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஆரம்பமாகும் எனவும், ஐந்து சென்ரிமீட்டர் வரையில் பனிப்பொழிவு பதிவாக கூடும் எனவும் அது எச்சரித்துள்ளது.

இதேவேளை ரொரன்ரோ பெரும்பாகத்தில் இன்று இரவில் இருந்து நாளை காலை வரையில் ஐந்தில் இருந்து பத்து சென்ரிமீடடர் வரையிலான பனிப்பொழிவு பதிவாக கூடும் எனவும் சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அந்த வகையில் நாளை காலையிலும் போக்குவரத்துகள் சிரமம் மிக்கதாக காணப்படும் எனவும், பனிப்பொழிவினைத் தொடர்ந்து மழை வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் வானிலை அவதானிக்ள முன்னுரைத்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *