ரொரன்ரோ பெரும்பாகத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல்களில் 3 துப்பாக்கிககள் கைப்பற்றப்பட்டதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

427

ரொரன்ரோ பெரும்பாகத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றுவளைப்பு தேடுதல்களின் போது 3 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் மேற்கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றிவழைப்புத் தேடுதல்கள் விட்பி மற்றும் ஸ்காபரோ பகதிகளில் நேற்று காலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் என்று சந்தேகிக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கடந்த யூலை மாதத்தில் தொடங்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே நேற்றைய இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஸ்காபரோவின் Misthollow Square, Whitby மற்றும் Midland Avenueவில் Hickory Street North பகுதி ஆகியவற்றில் நேற்று காலையில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது ஏறக்குறைய 14,000 டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் மற்றும் 15,000 டொலர்கள் ரொக்கப்பணம் என்பனவும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன், ஒரு பெண் ஆறு ஆண்கள் என்று ஏழு பேர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் 22 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *